கூவம் நதிக் கரையில்,
குளிர்ந்த வாடைக் காற்றில்,
குளித்த தலை அறியாத,
குழந்தை ஒன்று கேட்டது,
குடிசையை மறந்து,
"குடி "யை மட்டுமே மணந்த தந்தையைப் பார்த்து,
சமச்சீர்க் கல்வீன என்னப்பா?
நேத்து ரேடியோல கேட்டேன்,
நீ வாங்கிட்டு வர சமோசா மாரி இருக்குமா?
இல்ல
அம்மா செய்யுற களி மாரி இருக்குமா ப்பா?
1 comment:
samacheer kalvi.
Post a Comment